கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்காகக் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர்விளைச்சல் பெற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.