பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, தாமிரபரணி ஆற்றின் பிரதானக் கால்வாய்கள், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர் தேக்கங்களில் இருந்து இன்று முதல் 154 நாட்களுக்கு 13 ஆயிரத்து 725.92 மில்லியன் கன அடி நீரை திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தாமிரபரணி பாசனத்தின் கீழ் திருநல்வேலி மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள 46 ஆயிரத்து 107 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திறந்து விடப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version