தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, சிவகங்கை, அரசனேந்தல் அருகே ஜீவா, திருப்புவனம் அருகே மலர்விழி, திருச்சி அருகே ஜார்ஜ், மண்ணச்சநல்லூர் அருகே செல்வகுமார் உள்ளிட்ட 18 பேர் தமிழகம் முழுதும் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளார்.