திண்டுக்கல்லில் ரூ.70.50 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் 36 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், ஓய்வுக்கூடம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டினார்.

இதேபோல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் காஞ்சிபுரம், சென்னை, திருச்சி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

மேலும், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திண்டுக்கல்லில் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தையும் காணொலி காட்சி மூலம் அவர் துவக்கி வைத்தார்.

மேலும் தஞ்சாவூர், தேனி, காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 79 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 திட்டப்பணிகளையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனியில் 20 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 குடிநீர் திட்டங்களையும் அவர் திறந்து வைத்தார்.

Exit mobile version