84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 240 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல், இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமனையின் சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.