தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் 102 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கோடியே 35 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டடங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கான புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 102 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர், இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு, நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல், தஞ்சை அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 கோடியே 35 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைத்த அவர், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.