காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், சுமார் 206 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரகத்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்படும் மேம்பாலத்தினால் அப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.