சரபங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று முறை மூலம் வழங்கும் சரபங்கா திட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று முறை மூலம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தை, செயல் வடிவமாக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version