இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார கார் அறிமுகம்: முதல்வர், துணை முதல்வர் பயணம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி சம்பத், கடம்பூர் ராஜூ மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் தயாரிக்கப்பட்ட மின்சார காரை ஹூண்டாய் நிறுவனத்தின் தமிழக பிரிவு அறிமுகம் செய்துள்ளது. கோனா என பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார காரின் விலை 25 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார காரை அறிமுகப்படுத்தி வைத்த பின்னர் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதில் பயணம் செய்தனர்.

Exit mobile version