கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ் நாட்டு கோழிகள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கால்நடை பாரமரிப்புத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளுக்கு நாட்டு கோழிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நாட்டு கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள் வழங்கப்படும் என்றும், இதற்காக கோழி அபிவிருத்திக் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனவும், கடந்தாண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 25 கோடி ரூபாயை, 50 கோடி ரூபாயாக உயர்த்தி, முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தார். அதன்படி, ஒரு பயனாளிக்கு தலா 50 கோழிகள் என்ற வகையில், 77 ஆயிரம் கிராமப்புற பெண்களுக்கு நாட்டு கோழிகள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Exit mobile version