சேலத்தில் புதிய சட்டக் கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் மணியனூரில் புதிய சட்டக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த புதிய சட்டக் கல்லூரியில் 5 மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு பிரிவில் 80 மாணவர்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணனே சேலம் புதிய சட்டக் கல்லூரிக்கும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 14-வது சட்டக் கல்லூரியாக சேலம் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பு விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சிறப்பு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஒரே நேரத்திலேயே மூன்று சட்டக் கல்லூரிகளை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும், ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 70 கோடி ரூபாய் முதலமைச்சர் ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version