ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதல்வர் திறந்து வைத்தார்

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைகண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் முழு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version