போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். போலியோ சொட்டு மருந்துகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version