ரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறைந்த வருவாய் பிரிவினருக்காக சென்னை மகாகவி பாரதியார் நகரில் ரூ.129 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 510 வீடுகளையும், உயர் வருவாய் பிரிவினருக்காக முகப்பேர் கிழக்கு பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 40 வீடுகளையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல், மதுரை அண்ணாநகரில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, துணை முதலமைச்சரும், வீட்டு வசதி மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version