திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் இருந்து வருகிறது. இந்த திட்டமானது ஆயிரத்து 532 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான தொடக்க விழா இன்று அவினாசியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
அவினாசி – கோவை பைபாஸ் சாலையில் எம்.நாதம்பாளையம் பிரிவு எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
விழாவில் சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து விழா நடைபெறும் இடம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.