புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதிலாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். மத்திய அரசிடம் புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கோரி இருப்பதை சுட்டிக்காட்டினார். மத்திய அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட்டு, தாங்கள் கோரிய நிதியை உடனடியாக வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் குடிநீர் பற்றாக்குறையை போக்க, நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் போர்வெல்கள் அமைக்கப்படும் என்றும் நிவாரண பணிகள் முடிந்து இன்னும் நான்கு நாட்களில் மக்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்புவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.