சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
முதலமைச்சர் பிரசாரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறையில் நாளை காலை 9 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்கு வாழப்பாடியிலும், 1 மணிக்கு அயோத்தியா பட்டினத்திலும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர், நாளை இரவு காரிமங்கலத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
23 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலூர் மாவட்டம் சேலம் கூட்ரோடில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், 10.30 மணிக்கு ஜோலார்பேட்டையிலும், 11.30 மணிக்கு வாணியம்பாடியிலும், நாண்பகல் 1 மணி வரை ஆம்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு குடியாத்ததில் பிரசாரத்தை தொடரும் முதலமைச்சர், இரவு 7.30 மணிக்கு கே.வி குப்பத்திலும், 8.30 மணிக்கு காட்பாடியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் இரவு 9 மணி முதல் வேலூரில் இரண்டு இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
24 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வேலூர் மாவட்டம் வள்ளளாரில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9.30 மணிக்கு ஆற்காட்டில் வாக்கு சேகரிக்கின்றார். தொடர்ந்து ராணிப்பேட்டையில் 10 மணிக்கும், சோளிங்கர் பகுதியில் மதியம் 1 மணி வரை பிரசாரம் செய்கிறார். மாலை 4 மணிக்கு அரக்கோணத்தில் பிரசாரத்தை தொடரும் முதலமைச்சர், 5.15 மணியளவில் திருத்தணியில் வாக்கு சேகரிக்கின்றார். தொடர்ந்து திருவள்ளூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இரவு 9.30 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.