வேலூர் தொகுதியில் முதலமைச்சர் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்

வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இறுதிகட்டத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அணைக்கட்டு மற்றும் வேலூர் பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்
ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். முதலமைச்சரின் வருகையை அடுத்து பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version