நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி, பள்ளபட்டி, இனங்கனூர், குரும்பப்பட்டி, ஆண்டிப்பட்டி கோட்டை மற்றும் ஈசநத்தம் பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திருப்பரங்குன்றம் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வலையங்குளம், பெருங்குடி, அவனியாபுரம், விரகனூர், ஐராவதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.