5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட தமிழக அரசின் மருத்துவ காப்பீடு அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் 1 கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 96 ஆயிரம் பேர், 5 ஆயிரத்து 134 கோடி ரூபாய் அளவுக்கு பயன் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காப்பீடு தொகையை 2 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி நேற்று உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 1 கோடியே 58 லட்சம் குடும்பங்கள் 5 லட்சம் வரையிலான காப்பீடு தொகைக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
Discussion about this post