கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மா உற்பத்தியில் முன்னோடி மாவட்டமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் அரசு சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 50 அரங்குகள் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் விளையக்கூடிய மாம்பழ வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அரசின் பல்வேறு துறைசார் நலத்திட்ட பணிகள் குறித்த விளக்கங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரபாகர்,பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். 29 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை 7 லட்சத்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
Discussion about this post