திருமலை ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புகழ்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது 4 மாட வீதியில் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என மனம் உருகி வேண்டி கொண்டனர். இதில் இணை செயல் அலுவலர், துணை செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் பக்தர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post