காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பிற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என குமரி மாவட்ட தேனி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த தேனி உற்பத்தியாளர்கள் சீசனுக்கு ஏற்றார்போல் கேரளா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனி பெட்டிகளை எடுத்துச்சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கேரளாவில் தேன் உற்பத்தி நலிவடைந்துள்ளதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, குமரி மாவட்டத்தின் குலசேகரம், கொட்டூர்கோணம், பேச்சி பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேனி கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு தேன் உற்பத்தி நல்ல முறையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள தேன் உற்பத்தியாளர்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பிற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post