ஆரணி அருகே கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில், தூர்வாரும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கமண்டலநாக நதி ஆற்றின் குறுக்கே எஸ்.வி.நகரம் கிராமத்தின் அருகே இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டினை 90 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஆரணி , வேலூர்,செய்யாறு பகுதிகளில் உள்ள 22 ஏரிகள் விரைவில் நிரம்பும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணைக்கட்டில் தடுப்பு சுவருக்கு கான்க்ரீட் வெளிப்புற சுவர் அமைத்தல்,தலை மதகு சீரமைத்தல்,ஷட்டர்களை சீரமைத்தல்,வாய்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.