தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகள், பணம் மோசடி – போலிச் சாமியார் கைது

சென்னை அமைந்தகரையில், செய்வினை மற்றும் தோஷம் கழிப்பதாகக் கூறி, பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிய போலிச் சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைந்தகரை பொண்ணுவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ஆனந்த், அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். கோயிலுக்கு வரும் பெண்களிடம் நட்பாகப் பழகிய ஆனந்தன், திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தோஷம் கழிக்க சிறப்பு பூஜை செய்வதாக கூறி, நகைகளை எடுத்துவரச் சொல்லி, அதை கலசத்தில் போட்டு தேங்காய் வைத்து மறைத்துக் கட்டியுள்ளார்.மேலும் கலசத்தை 48 நாட்கள் பூஜை செய்யுமாறும் கூறியுள்ளார். அதை நம்பிய அவர்கள் தங்களுடைய நகைகளை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நகைகளை கலசத்தில் போடாமல் கொள்ளையடித்த சாமியார், வெறும் கலசத்தை மட்டும் கொடுத்துள்ளார். தாங்கள் ஏமாந்தது தெரிய வரவே, அமைந்தகரை காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரையடுத்து காவல்துறையினர் ஆனந்தனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version