சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க துணை தூதராக கிறிஸ்டோபர் டபுள்யூ ஹோட்ஜஸ் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்தவர் ஜூடித் ரேவின். இவர் போன வாரத்தில் துணைத் தூதர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று புதிய துணை தூதராக, கிறிஸ்டோபர் டபுள்யூ ஹோட்ஜஸ் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னரே ஆப்கானிஸ்தான் மறுகுடியமர்வுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக அலோசகர், கிழக்கு நாடுகளின் விவ்காரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஊடக உறவு துணை செயலராக பணியாற்றியுள்ளார்.
மேலும், ஜெருசலேம் தூதரக துணை தலைமை அதிகாரியாகவும், பல்வேறு நாடுகளின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அலுவலகங்களில், துணை இயக்குநரகாவும் பதவி வகித்தவர் ஆவார். இந்த பொறுப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் கிறிஸ்டோபர் கூறியதாவது பின்வருமாறு உள்ளது.
அமெரிக்க துணை தூதரகம் தமிழ்நாடு மற்றுமின்றி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத் தீவுகளின் துணை தூதரகமாகவும் செயல்படும். இதனால் தென் மாநிலங்களுக்கான நல்லுறவை வலுப்படுத்த, இந்த பொறுப்பை வாய்ப்பாக கருதுகிறேன். வரும் காலத்தில் வணிகம், கல்வி, விண்வெளி துறைகளில், இரு நாடுகளுக்குமான உறவு வலுப்பட பாலமாக இருக்கும் வாய்ப்பு, இதனால் கிடைத்துள்ளது என்று கிறிஸ்டோபர் குறிப்பிட்டுள்ளார்.