பழமைவாய்ந்த பொன்னியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 பால்குட உற்சவம் நடைபெற்றது.
சென்னை திருவொற்றியூரில் அஜாக்ஸ் பேருந்து நிலையத்தில் பழமைவாய்ந்த பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பால்குட உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பெரியார் நகர் சாய்பாபா கோவிலிருந்து பெண்கள் 108 குடங்களில் அம்மனுக்கு பால் குடம் எடுத்து வந்தனர். பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.