திருப்பூரில் கடந்த 15 நாட்களாக சுற்றி திரிந்து சின்னதம்பி யானை விளை நிலங்களில் ஏற்படுத்திய சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மண்டலத்திற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 23 புதிய பேருந்துகளில் ஏழு பேருந்துகளை முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைத்தார். மீதமுள்ள பதினாறு பேருந்துகளை திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய விளைநில பகுதிகளில் தங்கியிருந்த சின்னத்தம்பி யானை வனத்துறை மூலம் பாதுகாப்பாக டாப்சிலிப் பகுதியிலுள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது என கூறினார்.
Discussion about this post