தமிழர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது: சீன அதிபர்

தமிழக மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது இரண்டரை மணி நேரம் நீடித்த ஆலோசனையில் இருநாட்டு தலைவர்களும், பெருளாதாரம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து பேசியதாக விஜய் கோகலே தெரிவித்தார். இரு தரப்பு உறவுகள் மேம்படுத்துவது குறித்தும் இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தியாக கூறிய விஜய் கோகலே, தமிழகம் – சீன இடையேயான பண்டைய கால வர்த்தக உறவு மற்றும் போதிதர்மர் குறித்தும் பேசியதாக தெரிவித்தார்.

அப்போது, பல்லவர் காலத்தில் உருக்காக்கப்பட்ட சிற்ப கலைகள் குறித்தும் சீன அதிபரிடம் மோடி விளக்கம் அளித்தாக விஜய் கோகலே கூறினார். இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட சீன அதிபர், கலை நிகழ்ச்சிகள் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் என்றும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளும் சந்திக்கும் தேசிய பிரச்சனைகள் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசியதாக தெரிவித்த அவர், இன்றும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, இன்று காலை 9.05 மணிக்கு கிண்டியில் இருந்து புறப்படும் சீன அதிபர் ஷி ஜின்பிங், 9.50 மணி அளவில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கு அவரும், பிரதமர் மோடியும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதியம் 12.45 மணி வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மதிய விருந்துக்குப் பின்னர் அங்கிருந்து புறப்படும் ஷி ஜின்பிங் மதியம் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். ஒன்றரை மணிக்கு 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், அரசுமுறைப் பயணமாக நேபாளம் புறப்பட்டுச் செல்கிறார்.

Exit mobile version