கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சீனா!

 

கடந்த 2020ஆம் ஆண்டு உலகையே உலுக்கியது கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் ஆனது சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வூகான் நகரில் இருந்து பரவியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வைரஸின் பாதிப்பினால் அதிக அளவிற்கு உயிர்பலி அரங்கேறியது. தடுப்பு மருந்துகள் மற்றும் தனித்து இருத்தல் போன்றவற்றினால் 2022ஆம் ஆண்டு ஓரளவிற்கு கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது உலக நாடுகளில் பலவற்றில் 95 சதவீதம் வைரஸ் தொற்றுக் குறைந்துள்ளது. இருப்பினும் தற்போது சீனாவில் ஆங்காங்கே கொரோனாத் தொற்று தலையடுத்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங், மக்கள் அனைவரையும் பாரம்பரிய மருத்துவத்தை பின்பற்றும்படி வழியுறுத்தியிருந்தார்.

சீன பிரதமரின் இத்தகைய ஆலோசனையை தற்போது சீன மக்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர். சீனாவின் பாரம்பரிய மருத்துவங்களான மூலிகை மருத்துவம், எண்ணெய் மசாஜ் போன்றவற்றை பின்பற்றத் தொடங்கியிருப்பதால் சாதாரண காய்ச்சல், சளி போன்ற ஆரம்பநிலை கொரோனா அறிகுறிகளை தொடக்கத்திலேயே குணப்படுத்த முடிகிறது என்று அந்நாட்டினர் கூறுகின்றனர். மேலும் சீனர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய மருத்துவம் 3000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version