3 புதிய செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா

நகர மேம்பாடு, உள்கட்டமைப்பு திட்டமிடுதல், வளங்களை ஆய்வு செய்தல் ஆகியவற்றுக்கான 3 புதிய செயற்கைக்கோள்களைச் சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

சீன விண்வெளித் தொழில்நுட்பக் கழகம் தயாரித்த, ZY-1 02D என்ற, வளங்களை ஆராயும் செயற்கைக்கோள் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இது சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள சான்ஷி மாகாணத்தின் தையுவான் விண்வெளி மையத்தில் இருந்து, LongMarch 4 B ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இத்துடன், பீஜிங் பல்கலைக்கழகம் தயாரித்த 16 கிலோ எடை கொண்ட PNU-1, ஷாங்காய் தனியார் விண்வெளி தொழில்நுட்பக் கல்லூரி தயாரித்தது உள்பட இரண்டு சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இந்த செயற்கைக் கோள்களில் உள்ள புற ஊதாக் கதிர் கேமரா, நகரங்களை மிகத் துல்லியமாகப் படமெடுக்கும் வசதி கொண்டதாகும்.

Exit mobile version