“போருக்குத் தயாராகுங்கள்” – இந்திய எல்லையில் உள்ள சீனப் படையினருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கருத்து தெரிவிப்பு!

இமயமலையை ஒட்டியுள்ள லடாக் பகுதிக்குள் கடந்த 2020-ல் அத்துமீறி சீன இராணுவத்தினர் நுழைந்தனர். இதனால் நமது இந்திய இராணுவத்தினருக்கும் சீன இராணுவத்தினருக்கும் இடையே கடுமையான தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் இந்திய இராணுவத்தினர் சீன இராணுவத்தினரை தாக்கி விரட்டினர். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள தவாங் செக்டாட் பகுதியில் அத்துமீறி சுமார் 200 சீனப் படையினர் நுழைந்துள்ளனர். உடனே அங்கிருந்த இந்தியப் படையினைச் சேர்ந்த வெறும் 50 ராணுவ வீரர்கள் சீனப் படையினரை விரட்டி அடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய எல்லையை ஒட்டி குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் முக்கியமாக அவர் கூறியதாவது, போருக்கு தாயாராக இருக்கவும், எந்தவித தாக்குதலையும் எதிர்த்துத் திருப்பி அடிப்பதற்கு தயாராக இருங்கள் என்று பேசியுள்ளார். இது உலக நாடுகளின் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version