2020 -ல் செயற்கை நிலவை விண்ணில் செலுத்த தயாராகும் சீனா

வரும் 2020 ஆண்டு சீனா தன்னுடைய செயற்கை நிலவை விண்ணில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. சீனாவின் தென்மேற்கு நகரமான செங்கிடு இந்த ஏற்பாட்டினை செய்திருக்கிறது. இப்படி செயற்கை நிலவை விண்ணில் ஏற்படுத்துவதன் மூலம் செங்கிடு நகரத்திற்கு ஒரு வருடத்திற்கு மின்சாரத்திற்கு செலவாகும் 240 லட்சம் ரூபாயை மிச்சம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.தெருவிளக்கு கொடுக்கும் வெளிச்சத்தை இந்த செயற்கை நிலவு கொடுக்கும் எனவும், மழை, புயல் காலங்களில் ஏற்படும் மின்சார பற்றாக்குறையையும், இந்த செயற்கை நிலவு தீர்த்துவைக்கும் என்றும் சீனா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படி இந்த செயற்கை வெளிச்சத்தை சீனா உருவாக்கயிருக்கிறது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளில் கண்ணாடி போன்ற படிவத்தை பொருத்துவதன் மூலம் வெளிச்சத்தின் பிம்பத்தை நகரத்தின் மீது பிரதிபலிக்க செய்யமுடியும். இந்த திட்டத்தை பிரெஞ்சு ஓவியர் ஒருவர், தன் ஓவியத்தில் பாரிஸ் நகரத்தின் மீது நெக்லஸ் ஒளியால் மின்னுவது போல வரைந்திருப்பார் .இந்த ஓவியத்தை மாதிரியாய் வைத்து தான் சீனா அறிவியலாளர்கள் செயற்கை நிலவை வடிவமைத்து வருகின்றனர். இயற்கை நிலவை காட்டிலும், இந்த செயற்கை நிலவு 8 மடங்கு வெளிச்சம் அதிகம் தரக்கூடியது என்பது குறிப்பித்தக்கது. அடுத்து வரும் 4 ஆண்டுகளில் இதுபோன்று இன்னும் 3 செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்த சீனா முடிவுசெய்திருக்கிறது.

Exit mobile version