குழந்தைங்க ஸ்கூலுக்கு லீவு போட்டால் பெற்றோர்களுக்கு சிறை! திடுக்கிட வைக்கும் சவுதி அரசு!

மாணவர்கள் school-ஐ கட் அடித்தால், பெற்றோருக்கு சிறை தண்டனை கொடுக்கிறது ஒரு நாட்டு அரசு.. எந்த நாடு அது? என்ன சட்டம் அது? இதோ இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம் .

மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்தால் பெற்றோர்களுக்கு சிறை

பொதுவா பிள்ளைகளை லீவு போடாமல் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாலான பெற்றோர்களுக்கு சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. தொடர்ச்சியான விடுமுறை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் சவுதி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வகுப்பிற்குச் செல்லவில்லை என்றால், பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

மாணவர் மூன்று நாட்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றால் முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ஐந்து நாட்களுக்கு வகுப்பைத் தவறவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என்றும் பத்து நாட்கள் வகுப்பை புறக்கணித்தால் மூன்றாவது முறையாக பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.மேலும், மாணவர் பதினைந்து நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அந்த மாணவர் கல்வித் துறையின் கீழ் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க சவுதி அரசு புதிய திட்டம் 

இதற்கும்மேல், சரியான காரணமின்றி குழந்தைகள் 20 நாட்கள் விடுமுறை எடுத்தால், அவர்களின் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தை 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால், பள்ளி முதல்வர் அந்த குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர் குறித்த தகவலை கல்வி அமைச்சகத்திற்கு
அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் வாக்குமூலத்தைப் பெற்ற பிறகு, பெற்றோரின் தவறால் குழந்தை வகுப்புக்கு வரவில்லை என நிரூபிக்கப்பட்டால், பெற்றோர்களுக்கு அதிகபட்சமாக சிறை தண்டனை வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தடையற்ற, தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சவுதி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது…

Exit mobile version