அரங்கேறும் குழந்தைக் கடத்தல்கள்! பெற்றோர்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்!

இன்றைய காலக்கட்டங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. ஏனெனில் இன்றாய அளவில் பெறுகிவரும்  குழந்தைகள் மீதான  குற்றசம்பவங்கள்  என்பது கணக்கில் அடங்காதவை. அதிக அளவில் குழந்தைகளுக்கு பாதுகப்பு இல்லாததால் இம்மாறியான குற்றசம்பவங்கள் நடந்துக்கொண்டே உள்ளது . மேலும்  தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட  16.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தமிழ்நாடு என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது.  2021-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம்  ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவாகி உள்ளது.  இது 2020-ஆம் ஆண்டை விட 16 புள்ளி  2 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் மட்டும் 2,189 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் இது 2020-ஆம் ஆண்டை விட 27.7 சதவீதம்  அதிகம் ஆகும்.  இது போலவே இந்த ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் சம்பவம்  அதிகரித்து உள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுபோலவே புதுச்சேரியில்  இரண்டு மாத குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி: 

புதுச்சேரியில் இரண்டு மாத ஆண் குழந்தை  கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை கடந்த 9 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவில் மீட்கப்பட்டது. புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரயைச் சேர்ந்தவர்கள் பிரதாப் மற்றும் சோனியா தம்பதிகள். இவர்களுக்கு 5 பிள்ளைகள். புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சோனியா விளையாட்டுப் பொருள்களை விற்று வருகிறார். கடந்த மாதம் 27-ம் தேதி இரவு சோனியா, தனியார் பூச்செண்டு விற்பனை செய்யும் கடையின் வாசல் முன்பு தனது 2 மாத குழந்தை ஆதித்யாவுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இதனிடையே தூக்கக் கலக்கத்தில் நள்ளிரவு விழித்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோனியா பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குழந்தை காணாமல்போன பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் குழந்தை ஆதித்யாவை ஒரு தம்பதி தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடினார்கள். இதில் குழந்தையைக் கடத்தியது கர்நாடக மாநிலம் பெங்களுருவைச் சேர்ந்த புனிதா பசவராஜ் தம்பதி என்பது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களுர் விரைந்த தனிப்படை போலீஸார் குழந்தையைக் கடத்திய தம்பதியினை நேற்று இரவு கைது செய்தனர். அவரிடமிருந்த சோனியாவின் 2 மாத ஆண் குழந்தையையும் மீட்டெடுத்தனர். அவர்களை விசாரித்ததில், பசவராஜின் மனைவி புனிதா 7 மாத கர்ப்பவதியாக இருந்ததாகவும், கரு கலைந்ததால் தனக்கு வாரிசு இல்லை என்ற அடிப்படையில் சோனியாவின் குழந்தையைக் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கடத்தலை தனது கணவர் மற்றும் சகோதரரின் உதவியுடன் செய்ததாக புனிதா, விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புனிதா மற்றும் அவரது கணவரையும் சகோதரரையும் புதுச்சேரி போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு மூவரையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டுசென்று அடைத்தனர். மீட்கப்பட்ட குழந்தையான ஆதித்யாவை தாய் சோனியாவிடமே போலிசார் ஒப்படைத்தார்கள்.

 

 

 

Exit mobile version