பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பும் மனுக்களைப் பிரித்துக் கூட பார்க்காமல் குப்பைகளில் போடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…
பொதுமக்கள் தங்கள் குறைகளைக் குறிப்பிட்டு அனுப்பும் மனுக்களைப் பிரித்துக் கூட பார்க்காமல் முதல்வர் அலுவலக அதிகாரிகள் அவற்றைக் குப்பையில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து நலத்திட்டங்கள் எதுவும் மக்களுக்கு சென்றடைவதில்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் சார்ந்த நலத்திட்டங்கள் தற்போது ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருக்கும்போது, முதல்வர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மனுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து மக்கள் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வந்தது.
ஸ்டாலினுக்கு முதல்வர் செயலாளர்கள் என, முருகானந்தம், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் என நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள், முதல்வர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை பிரித்துக் கூட பார்ப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கோரிக்கை வைக்கும் மனுக்கள் அனைத்தும் கண்டுகொள்ளாமல் குப்பைத் தொட்டிக்குச் செல்கின்றன.
ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத ஸ்டாலின், தனது அலுவல் வேலைகள் முழுவதையும் செயலாளர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு ஹாயாக உள்ளார்.
Discussion about this post