குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்
போதிய மழை பொழியாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் நீர் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை மாநகர மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள், கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் 9 ஆயிரம் லாரிகள் மூலம் சென்னையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் தட்டுப்பாட்டை தீர்க்கும் வழிமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்
Discussion about this post