தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி வருவதாகவும், திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து மேச்சேரியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுகவை தவிர கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றி வருவதாகவும், திமுக பொய்யான வாக்குறிதிகளை அறிவித்து மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Discussion about this post