தான் சார்ந்த இயக்கத்திற்கு விஸ்வாசமாக இல்லாதவர் மக்களுக்கு எப்படி உண்மையாக நடந்துகொள்வார் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது முதலமைச்சர் குற்றச்சாட்டினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். வெஞ்சமாங்கூடலூரில் வாக்கு சேகரித்து, பொதுமக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், திமுக மற்றும் அக்கட்சி வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, விஸ்வாசம் இல்லாமல் நடந்து கொண்டவர் செந்தில் பாலாஜி என குற்றம்சாட்டினார். விவசாயிகளின் நலன் குறித்து அக்கறையில்லாமல், அவர்களின் கஷ்டங்களை அறியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக விமர்சித்தார்.
Discussion about this post