சேலம் மாவட்டம் தலைவாசலில் 396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா 396 கோடி ரூபாயில் நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பேசிய முதலமைச்சர், கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார்.
இதற்காக வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், கால்நடை தொடர்பான தொழில் நுடபங்களை கேட்டறிந்தார். இந்த நிலையில், தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் துணை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post