ஈரோடு மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பன்னீர்செல்வம் பார்க்கில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், அங்கு நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், 9.30 மணியளவில் ஈரோட்டில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறும் பாசறை நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். தொடர்ந்து 10 மணியளவில் மாரியம்மன் கோயில் வீரப்பன் சத்திரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து 11.30 மணியளவில் தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும், நண்பகல் 12 மணிக்கு சித்தோடு பகுதியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். 12:30 மணிக்கு வில்லரசம்பட்டியில் THE WAFER RESORT-ல் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், 2:30 மணிக்கு ஊத்துக்குளி, சென்னிமலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், மாலை 4 மணிக்கு ஓடாநிலை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.45 மணிக்கு அரசலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார். 5:30 மணிக்கு அவல்பூந்துறையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6:30 மணியளவில் பெருந்துறையில் கைத்தறி மற்றும் விசைத் தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடும் முதலமைச்சர், இரவு 7:30 மணியளவில் பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
Discussion about this post