சேலத்தில், 66 ஏக்கரில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய “பஸ்போர்ட்” அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டம், மணியனூரில் அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் அரபிக் கல்லூரி அருகே இந்த நவீன பஸ்போர்ட் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் புதிய சட்டக் கல்லூரிக்கான கட்டிடம் இந்த ஆண்டே கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post