தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து, நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆயிரத்து 264 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் சார்பில், நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்றும் இந்த திட்டத்தை விரைவாக முடிக்க தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post