அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திமூர் பகுதியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post