சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரம் விளக்குப் பகுதியில், மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை பார்வையிட்ட பின்னர், பொது மக்களுக்கும், மாநகராட்சி பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், ஊட்டசத்து மருந்துகள், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ முகாம்கள் காரணமாக சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இதுவரை 84% பேர் குணமடைந்து திரும்பியுள்ளதாகவும் கூறினார். மும்மொழிக் கொள்கை விஷயத்தில் முதல்வர் தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும், தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகளை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மக்களின் கருத்தை பிரதிபலித்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி – அமைச்சர் காமராஜ்!
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023