தேசிய நிர்வாக சீர்திருத்த தர வரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும், அவர் நலமுடம் இருக்க வேண்டியும் அதிமுக சிறுபான்மைப் பிரிவு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைக்கு பிறகு, அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர் அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி எப்போதும் இருக்கும் என்றும், தமிழகத்தின் எதிர்காலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் தெரிவித்தார்.