தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையிலிருந்து, நாளை முதல், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு ஆகிய பகுதிகளுக்கு, தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் போக சாகுபடிக்காக, நாளை முதல், 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், பழைய ஆயக்கட்டு பகுதியில் 3 ஆயிரத்து 386 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பகுதியில் ஆயிரத்து 873 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமென, முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.