புதுச்சேரியில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடிக்கு எதிரான தர்ணா போராட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி வாபஸ் பெற்றார்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி கடந்த 13 ஆம் தேதி முதல், ஆளுனர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். இந்த போராட்டம் நேற்றுடன் ஆறாவது நாளாக தீவிரமானது. இந்நிலையில் ஆளுநர் கிரண் பேடி நாராயணசாமியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனால் நேற்று ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி, நாராயணசாமி இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. நான்கரை மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், ரோடியார் பஞ்சாலை உள்பட பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டன. முக்கியமான 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும என்று கிரண்பேடி தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
Discussion about this post