முதலீடுகளை ஈர்க்கும் வகையில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் 60 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் அதற்கான வலைதளத்தை துவக்கி வைத்தார்.