தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சுகாதாரத்துறை சார்பில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான தடுப்பு உத்திகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், வெளிநாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.  இதில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் காணொளி விளக்ககாட்சி மூலம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்துமாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக கூறினார்.  

Exit mobile version